வளர்க்கப்படும் வகையிலான சால்மன் மீன்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், கடலோர மக்கள் மிகவும் குறைந்த விலையில் மீன்களை வாங்க இயலாமல் பாதிக்கப் படுகின்றனர்.
தற்போது உலகளவில் நுகரப்படும் சால்மன் வகை மீன்களில் சுமார் 70 சதவீதத்தினை வழங்குகின்ற சால்மன் மீன் வளர்ப்புப் பண்ணைகளின் மீது மீன் எண்ணெய்க்கான தேவை அதிகரிப்பும் திணிக்க ப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில் பதிவான மீன் எண்ணெய் பயன்பாட்டில் 60 சதவிகிதம் ஆனது வளர்க்கப் பட்ட அட்லாண்டிக் சால்மன் மீனிலிருந்து மட்டுமே பெறப் படுகிறது.
ஏழ்மை நிலையில் உள்ள கடலோரச் சமூகங்கள் உணவு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய இரண்டிற்கும் இந்தச் சிறு மீன்களையே சார்ந்துள்ளன.
ஆனால் இந்த மீன்கள் உள்ளூர் நுகர்வுக்கு கிடைப்பதற்குப் பதிலாக சால்மன் போன்ற வளர்ப்பு மீன்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்படுவதால், இந்த சமூகங்கள் மலிவு விலையில் புரதத்தை அணுகுவதில் சிரமத்தினை எதிர்கொள்கின்றனர்.