மேற்கு வங்க மாநிலத்தின் – புருலியாவைச் சேர்ந்த சாவ் முகமூடிக்கும் (Chau mask of Purulia), குஷ்மண்டியைச் சேர்ந்த மர முகமூடிக்கும் (wooden mask of Kushmandi), வங்காளத்தின் டோக்ராவிற்கும் (Dokras), படாசித்ராவிற்கும் (Patachitra), மதுர்கதிக்கும் (ஓர் வகையான பாய்- Madhurkathi) இந்திய புவிசார் குறியீட்டு பதிப்பகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (Geographical Indication Registry and Intellectual Property India) புவிசார் குறியீடு (Geographical Indication) வழங்கப்பட்டுள்ளது.
2017-18 ஆம் ஆண்டிற்கான காலகட்டத்தில் புவிசார் சொத்துரிமை பதிப்பகமானது நாட்டில் மொத்தம் 25 பொருட்களுக்கு புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது. அவற்றில் 9 பொருட்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவை.
சுமார் 500 குடும்பங்கள் சாவ் நடனத்தில் (Chau dance) பயன்படுத்தப்படும் மிகப் பெரிய வண்ணமயமான சாவ் முகமுடிகளின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. சுமார் 200 குடும்பங்கள் முக்ஹா நடனத்தில் (Mukha dance) பயன்படுத்தப்படும் மர முகமூடியின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
பஸ்சிம் மேதினிபூரில் உள்ள சில குடும்பங்கள் பட்டசித்ரா எனப்படும் அழகாக வர்ணம் தீட்டப்பட்ட ஓவியச் சுருள்களின் (painted scrolls) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. மேலும் சுமார் 8000 குடும்பங்கள் மதுர்கதி எனப்படும் ஒருவகைப் பாயின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.