TNPSC Thervupettagam

சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு 2017 - மரியானா வயாஜோவ்ஸ்க

October 3 , 2017 2480 days 840 0
  • சுவிட்சர்லாந்தின் லவ்சானேவில் உள்ள ஸ்விஸ் பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மரியானா வயாஜோவ்ஸ்கா, எண் கருத்தியலுக்கு தனது பங்களிப்பை அளித்தமைக்காக 2017-ம் ஆண்டிற்கான சாஸ்த்ரா ராமானுஜன் பரிசை பெறவுள்ளார்.
சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு
  • சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு 2005-ல் ஏற்படுத்தப்பட்டது. இது ஆண்டுதோறும், சீனிவாச இராமானுஜனால் பங்களிக்கப்பட்டு புகழடைந்த கணிதப் பிரிவுகளில் பங்களிப்புகள் அளிக்கும் இளம் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இதற்கான வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் இராமானுஜன் தனது 32 வயது வாழ்க்கைக்குள் நிறைய சாதனைகளை சாதித்தார்.
மரியானா வயாஜோவ்ஸ்கா
  • வயாஜோவ்ஸ்கா நிறைய அடிப்படையான எண் கருத்தியல் விஷயங்களுக்கு பங்களிப்புகள் அளித்த கணிதவியலாளர் ஆவார். இவர் உக்ரைனின் கிவ் நகரத்தில் 1984 நவம்பர் 2-ம் தேதி பிறந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்