TNPSC Thervupettagam
September 29 , 2019 1765 days 700 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா ராமானுஜன் விருதானது இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் கணிதவியலாளரான ஆடம் ஹார்ப்பருக்கு வழங்கப்பட இருக்கின்றது.
  • இந்த விருதானது பகுப்பாய்வு மற்றும் நிகழ்தகவு எண் கோட்பாடு ஆகியவற்றிற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளுக்காக அவருக்கு வழங்கப் படுகின்றது.
  • இந்த விருதானது தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார்ப் பல்கலைக் கழகமான சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தினால் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • தகுதி: சீனிவாச ராமானுஜனால் ஈர்க்கப்பட்டு அந்த துறையில் பணிபுரியும் 32 வயதிற்குக் குறைவான உலகம் முழுவதும் உள்ள கணிதவியலாளர்கள்.
  • வயது வரம்பு 32 ஆனது இந்தக் குறுகிய காலத்தில் ராமானுஜன் ஒரு தனித்துவமான பணியை நிறைவேற்றியுள்ளார் என்பதை நினைவுபடுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்