TNPSC Thervupettagam

சாஹிப்கஞ்ச் பல்முனை சரக்கு முனையம், ஜார்க்கண்ட்

September 13 , 2019 1774 days 746 0
  • ஜார்க்கண்டின் சாஹிப்கஞ்சில் கட்டப்பட்ட பல்முனை சரக்கு முனையமானது (Multi-Modal Terminal - MMT) செயல்பாட்டிற்கு வருகின்றது.
  • இது தேசிய நீர்வழிப் பாதை -1 (கங்கை நதி) இல் உள்ள இரண்டாவது பல்முனை சரக்கு முனையம் ஆகும்.
  • ராஜ்மஹாலில் உள்ள உள்ளூர்ச் சுரங்கங்களில் இருந்து உள்நாட்டு நிலக்கரியை கொண்டு செல்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கும்.
  • இணைப்பு:
    • நீர்வழிப் பாதை வழியாக இந்தியா - நேபாளம் ஆகியவற்றிற்கு இடையே சரக்குப் போக்குவரத்து.
    • வங்க தேசம் வழியாக  நதி மற்றும் கடல் வழி ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • இது கடல் பகுதிக்கு அப்பால் உள்ள பகுதியை கொல்கத்தா, ஹால்டியா மற்றும் வங்காள விரிகுடாவுடன் இணைத்துள்ளது.
  • முதலாவது MMT ஆனது 2018 ஆண்டு நவம்பர் அன்று வாரணாசியில் செயல்பாட்டுக்கு வந்தது.
  • பெரிய கப்பல்களின் பயணத்திற்காக, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் மேற்கு வங்காளத்தின் ஹால்டியா ஆகியவற்றிற்கிடையே இருக்கும் கங்கை நதியின் பாதையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக MMTகள் கட்டப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்