ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (Indian Institute of Technology -IIT) ஆராய்ச்சியாளர்கள் Pep I மற்றும் Pep II எனும் இரு சிறிய சக்தி வாய்ந்த மூலக்கூறுகளை கண்டறிந்துள்ளனர்.
இந்த இரு மூலக்கூறுகளானது மிகப்பெரிய அளவிலான தடுப்பு செயல்பாடுகளினை (Inhibitory activity) கொண்டதன் காரணமாக சிக்கன்குனியா நோயின் சிகிச்சையில் இவை பெரிதும் பயன்படும்.
இந்த மூலக்கூறுகள் மிகவும் அதிகளவிலான வைரஸ் எதிர்ப்பு செயல்பாடுகளினைக் (antiviral activity) கொண்டது. இவற்றினுடைய சிறிய அளவிலான வைரஸ் எதிர்ப்பு செயல்பாடானது சிக்கன்குனியா வைரஸின் செயல்பாடுகளை 99 சதவீதம் குறைக்கவல்லது.
Pep I மூலக்கூறுகளானது வைரஸ்களை கொல்லுதலில் மிகுந்த திறனுடையது. 5 மைக்ரோ மோலார் (micro Molar) அளவில் வைரஸ்களில் இவை 99% குறைவை ஏற்படுத்தும்.
இவை மிகுந்த செயல்திறனுடன் வைரஸ்களின் புரதத்தினுடன் பிணைந்து வைரஸ்களின் பெருக்கத்தை தடுக்கும்.
சிக்கன் குனியா ஆனது கொசுக்களினால் பரவக் கூடிய வைரஸாகும். இந்த வைரஸானது ஏடிஸ்எஜிப்தி (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) கொசுக்களினால் பரப்பப்படுகின்றது.