மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் ராம்ராவ் பாம்ரே 578 மீட்டர் நீளமுடைய தேங் சுரங்கப்பாதையை (Theng Tunnel) சிக்கிமில் துவக்கி வைத்துள்ளார். இச்சுரங்கப்பாதையே சிக்கிம் மாநிலத்தின் நீண்ட சுரங்கப் பாதையாகும்.
இச்சுரங்கப் பாதையானது எல்லைச் சாலைகள் நிறுவனத்தால் (Border Roads Organisation -BRO) கேங்டாக்-சுங்தங் மாநில நெடுஞ்சாலை மீது கட்டப்பட்டுள்ளது.
இந்த இருவழிச் சுரங்கப் பாதையானது சிக்கிம் நலைநகரான கேங்டாக்கிற்கும், சுங்தங்கிற்கும் இடையேயான நம்பிக்கைக்கு உகந்ததாக அல்லாத சாலைகளினுடைய பாதையை வேறுபக்க வழியைக் கொண்டு கடக்க உதவுகின்றது.
இந்த சுரங்கப்பாதையானது அனைத்து காலநிலைக்கும் ஏற்புடைய போக்குவரத்து இணைப்பை வழங்கும் (all-weather connectivity).