TNPSC Thervupettagam

சிக்கிம் பனிப்பாறைகள்

March 27 , 2020 1577 days 587 0
  • டேராடூனில் உள்ள வாடியா இமாலயப் புவியியல் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டு, சிக்கிமில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன என்பதைக் கண்டறிந்து உள்ளனர்.
  • 2000 ஆம் ஆண்டு முதல், மேற்கு மற்றும் மத்திய இமாலயப் பனிப்பாறைகள் குறைவான உருகுதலைக் கொண்டுள்ளதாக காட்டின.
  • ஆனால் சிக்கிம் பனிப் பாறைகளைப் பொறுத்த வரையில், உருகும் விகிதமானது அதிகரித்துள்ளது.
  • கோடைக் கால வெப்பநிலை அதிகரிப்பானது பனிப் பாறைகள் உருகுதலுக்கு முக்கியக் காரணமாகும்.
  • பனிப்பாறைகளின் நீளம், கழிவுகள் உள்ள பகுதிகள், பரப்பு, பனிப்பாறை ஏரிகள், பனி உயரம் ஆகிய பல்வேறு கூறுகளைப் பற்றி இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலாவது ஆய்வு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்