TNPSC Thervupettagam

சிக்கிம் மாநில உருவாக்க தினம் - மே 16

May 21 , 2022 828 days 319 0
  • 1975 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதியன்று சிக்கிம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது.
  • 1950 ஆம் ஆண்டில், இந்திய-சிக்கிம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இதன் மூலம், சிக்கிம் இந்தியாவினால் பாதுகாக்கப்படும் பகுதியாக மாறியது.
  • சிக்கிம் பகுதியை, 1975 ஆம் ஆண்டு வரையில் நம்கியால் வம்சத்தினர் ஆட்சி செய்தனர்.
  • 1975 ஆம் ஆண்டில் சிக்கிம் பிரதமர், இந்திய ஒன்றியத்தில் சிக்கிம் மாநிலம் இணைய விரும்புவதாக இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
  • இதனையடுத்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதில் 97.5% மக்கள் மன்னராட்சியை ஒழித்து சிக்கிம் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவளித்தனர்.
  • 35வது சட்டத் திருத்தமானது, சிக்கிம் மாநிலத்தை "இணை மாநிலமாக" மாற்றியது.
  • இந்த அந்தஸ்தினைப் பெற்ற ஒரே மாநிலம் சிக்கிம் மட்டுமே ஆகும்.
  • 36வது சட்டத் திருத்தமானது, 35வது சட்டத்திருத்தத்தை ரத்து செய்து சிக்கிமை முழு மாநிலமாக மாற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்