கேரளப் பல்கலைக் கழகம் மற்றும் அமெரிக்காவின் பெருங்கடல் அறிவியல் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை சிக்னல் மீன் இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது கேரள கடற்கரைக்கு அருகே, லட்சத் தீவுக் கடலின் ஆழமானப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது டெரோப்சரோன் இன்டிகம் என்று அழைக்கப்படுகின்றது. இது இந்திய நீரில் காணப்படக் கூடிய இனத்தின் முதலாவது வகையாகும்.
இந்த சிக்னல் மீன் ஆனது வழக்கத்திற்கு மாறான வண்ண அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் மிகவும் சிறப்பு வாய்ந்த முதுகுத்துடுப்புகளைப் புரட்டுவதன் மூலம் அதே இனத்தின் மற்ற மீன்களுடன் தொடர்பு கொள்கின்றது.