TNPSC Thervupettagam
February 9 , 2024 290 days 382 0
  • ஆஸ்ட்ரோ சாட் கலமானது, கடந்த எட்டு ஆண்டு செயல்பாட்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து சிக்னஸ் X-1 கருந்துளை அமைப்பின் மீதான ஊடுகதிர் துருவமுனை வாக்கத்தினை அளவிட்டுள்ளது.
  • ஆஸ்ட்ரோ சாட் கலமானது இந்தியாவின் முதலாவது பிரத்தியேக பல் அலைநீள வானியல் ஆய்வுக் கலமாகும்.
  • 40 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட சிக்னஸ்  X-1 என்பது நமது அண்டத்தில் உள்ள முதல் உறுதிப்படுத்தப்பட்ட கருந்துளை அமைப்புகளில் ஒன்று ஆகும்.
  • இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவை விட 400 மில்லியன் மடங்கு அதிகமான தொலைவில் அமைந்துள்ளது.
  • சிக்னஸ் X-1 அமைப்பில் உள்ள கருந்துளையானது சூரியனை விட 20 மடங்கு நிறை கொண்டது என்பதோடு இது இரட்டை மண்டல அமைப்பில் ஒரு கனமான மீப்பெரு நட்சத்திரத்தினை (சூரியனை விட 40 மடங்கு பெரியது) ஒரு துணை அமைப்பாகவும்  கொண்டுள்ளதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்