TNPSC Thervupettagam

சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான்

October 4 , 2019 1786 days 656 0
  • என்டியு சிங்கப்பூர், இந்தியாவின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் (All India Council for Technical Education - AICTE) ஆகியவை இணைந்து சிங்கப்பூர் - இந்தியா ஹேக்கத்தானின் இரண்டாவது பதிப்பை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளன.
  • இது உடல் நலம், கல்வி மற்றும் தூய்மையான ஆற்றல் ஆகியவற்றின் நிகழ்நேர சவால்களுக்குத் தீர்வு காணும் ஒரு புத்தாக்கத் தீர்வுகள் மீதான ஒத்துழைப்பிற்காக இந்த இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 36 மணிநேரம் நடத்தப்படும் ஒரு போட்டியாகும்.
  • 10,000 டாலர் மதிப்புள்ள முதல் பரிசானது 10வது அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் உள்ளனர்.
  • ஒரு தொட்டியில் உள்ள தாவரத்தில் பொருத்தப்பட்டுள்ள உணர்விகளைக் கொண்ட தொகுப்பின் மூலம் காற்று மாசுபாடுகளைக் கண்காணிக்க அந்த மாணவர்கள் உருவாக்கிய புத்தாக்கத் தீர்விற்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • அதிக அளவிலான மாசுகளைக் கண்டறிந்தவுடன், தாவரத்தின் அடிப்பகுதியில் இருந்து சுத்தமான காற்றைப் பரப்புவதற்காக அதில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய விசிறியானது தானாகவே இயங்கத் தொடங்கும்.
  • இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் ஓங் யே குங் பங்கேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்