TNPSC Thervupettagam

சிங்கப்பூர் ஒப்பந்தம் – நடுநிலை ஊடாட்டம் (மத்தியஸ்தம்)

April 7 , 2020 1601 days 524 0
  • நடுநிலை ஊடாட்டம் குறித்த சிங்கப்பூர் ஒப்பந்தம் என்பது சிங்கப்பூர் நாட்டின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஐக்கிய நாடுகள் ஒப்பந்தமாகும். இது இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
  • இது நடுநிலை ஊடாட்டத்தின் மூலம் பெறப்படும் சர்வதேசத் தீர்வுகள் ஒப்பந்தம் குறித்த ஐக்கிய நாடுகள் ஒப்பந்தம் என்றும் அறியப்படுகின்றது.
  • கத்தார் நாடு இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த மூன்றாவது நாடு கத்தார் ஆகும். சிங்கப்பூர் மற்றும் பிஜி ஆகிய நாடுகள் ஏற்கெனவே இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளின் நீதிமன்றங்களிடம் இந்த விவகாரங்களை நேரடியாக எடுத்துச் செல்வதன் மூலம் சர்வதேச மத்தியஸ்த தீர்வு ஒப்பந்தங்களின் அமலாக்கத்தைக் கோரும் வணிக ரீதியான நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண இது வழிவகை செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்