RT-PCR சோதனையின் சி.டி. மதிப்பு (CT Value) என்றால் Cycle Threshold Value (பயன்பாட்டு நிலையின் சுழற்சி மதிப்பு) என்று பொருள் ஆகும்.
இந்த மதிப்பு ஒரு நோயாளி கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா (நேர்மறை) இல்லையா (எதிர்மறை) என நிர்ணயிக்கிறது.
ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நிர்ணயிக்க சி.டி. மதிப்பு 35 ஆக இருக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) சமீபத்தில் அறிவித்தது.
ஒரு நபரின் சி.டி. மதிப்பு 35 என்ற அளவிற்குக் குறைவாக இருந்தால் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர் ஆவார்.
ஒருவேளை சி.டி. மதிப்பு 35 என்ற அளவிற்கு மேல் இருந்தால் அந்த நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப் படாதவர் ஆவார்.