ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மிக சக்திவாய்ந்த புயல் ஆன சிடோ புயல் ஆனது, மாயோட் எனப்படும் பிரான்சு நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தியப் பெருங் கடல் பகுதியில் அமைந்த தீவுக்கூட்டப் பகுதியினைத் தாக்கியுள்ளது.
பிரான்சு நாடானது, 1843 ஆம் ஆண்டில் மாயோட் பகுதியில் தனது குடியேற்றத்தினை மேற்கொண்டதோடு மேலும், 1904 ஆம் ஆண்டில் கொமரோஸ் உட்பட முழு தீவுக் கூட்டத்தையும் தனது பிராந்தியத்தில் இணைத்தது.
1974 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில், 95% பேர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர், ஆனால் 63% பேர் மாயோட் பகுதியின் மக்கள் பிரெஞ்சு நாட்டுக் காரர்களாக வசிக்க ஆதரவாக வாக்களித்தனர்.
கிராண்டே கொமோர், அஞ்சோவான் மற்றும் மொஹேலி ஆகியப் பகுதிகள் 1975 ஆம் ஆண்டில் தனது சுதந்திரத்தினை அறிவித்தன.
மாயோட் இன்றும் பிரான்சு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆளப்படுகிறது.