இந்தியாவின் சேகல் அறக்கட்டளையானது (Sehgal Foundation) மதிப்பு மிக்க சிட்டிசன் டிப்ளமசி விருதின் (Citizen Diplomacy Award) இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டு உள்ளது.
அந்நிறுவனம் மனித உரிமைகள் மற்றும் கிராமப்புற இந்தியச் சமூகங்களில் பெண்களின் அதிகாரமளித்தல் போன்ற அதன் பணிக்காக இந்த விருதைப் பெறவுள்ளது.
நான்காவது வருடாந்திர சிட்டிசன் டிப்ளமசி விருதானது ஆவெரேஜ் முகமதுவின் (Average Mohamed) நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான முகமது அமீன் அகமதுவுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த மதிப்புமிக்க வருடாந்திர விருதின் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொள்பவை செகல் அறக்கட்டளை, டெம்பி சிஸ்டர்ஸ் சிட்டிஸ் (Tempe Sister Cities) ஆகியனவாகும்.