TNPSC Thervupettagam

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கௌரவ நுழைவாயில்

April 27 , 2023 451 days 312 0
  • சச்சின் டெண்டுல்கரைக் கௌரவிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ் மிக்க சிட்னி கிரிக்கெட் மைதானம் (SCG) அவரது பெயரில் ஒரு நுழைவாயிலை திறந்து உள்ளது.
  • சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகமானது, மற்றொரு கிரிக்கெட் ஜாம்பவான் ஆன பிரையன் லாராவின் பெயரையும் இணைத்து இதில் இட்டுள்ளது.
  • சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நுழைவாயில்கள் முறையே டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளையும் லாரா, 277 என்ற அதிகபட்ச ஸ்கோரை அடித்ததன் 30வது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில் திறக்கப் பட்டன.
  • இந்தப் புதிய கௌரவத்தின் மூலம் இருவரும் புகழ்மிக்க டொனால்ட் பிராட்மேன், ஆலன் டேவிட்சன் மற்றும் ஆர்தர் மோரீஸ் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவில் இணைய உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்