TNPSC Thervupettagam

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 26

June 27 , 2024 150 days 123 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று இந்த நாளை அறிவித்தது.
  • சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான முறையில் நடத்துதல் அல்லது தண்டனையளித்தல் ஆகியவற்றிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையானது 1987 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த நாளினை இந்த தேதியானது குறிக்கிறது.
  • 1975 ஆம் ஆண்டில், பொதுச் சபையானது சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான முறையில் நடத்துதல் அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் வெகுவாகப் பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
  • பல சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வ நிதியம் ஆனது 1981 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறுவப் பட்டது.
  • 1985 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் ஆணையத்தினால் சித்திரவதை தொடர்பான முதல் சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்பட்டார்.
  • 2002 ஆம் ஆண்டில், சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கைக்கான விருப்பத் தெரிவு நெறிமுறை ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்