சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சர்வதேச தினம் – ஜுன் 26
June 27 , 2019 1979 days 761 0
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 26 ஆம் தேதியன்று சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.
சித்திரவதை மற்றும் பிற கொடுமைகள், மனிதாபிமானமற்ற அல்லது இழிவான முறையில் நடத்துதல் அல்லது தண்டனைக்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தமானது 1987 ஆம் ஆண்டு ஜுன் 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
1998 ஆம் ஆண்டு இது போன்ற நிகழ்வுகள் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டன.
இத்தினமானது உலகெங்கிலும் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிலிருந்து மீண்டு உயிர் வாழ்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவும் சித்திரவதைக் குற்றங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது.