2019 ஆம் ஆண்டு ஜனவரி 14-15 தேதிகளில் கிரேட்டர் நொய்டாவில் சிந்து உணவு-II வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
சிந்து உணவு - II ஆனது ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் வருடாந்திர உணவு மற்றும் பானங்களின் வர்த்தக கண்காட்சி ஆகும். இது இந்தியாவின் சிறந்த உணவுகள், பானங்கள் மற்றும் வேளாண் விளைபொருள்களை உலகளாவிய கொள்முதலாளர்களுக்கு காட்சிப்படுத்தும்.
இது வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து வர்த்தக ஊக்குவிப்பு மன்றத்தால் (TPCI - Trade Promotion Council of India) ஏற்பாடு செய்யப்படுகிறது.