TNPSC Thervupettagam

சிந்து சமவெளி எழுத்து வடிவங்களைப் பொருள் கண்டுணர்தல்

January 7 , 2025 8 days 92 0
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்து வடிவங்களைப் பொருள் கண்டுணர்வதில் வெற்றி பெறும் நிபுணர்கள் அல்லது அமைப்புகளுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப் படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • சிந்து சமவெளி பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்வதற்கு, புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளரும் பெரும் கல்வெட்டியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் அவர்களின் பெயரில் ஒரு இருக்கையினை அமைப்பதற்கு 2 கோடி ரூபாய் மானியத்தையும் அவர் அறிவித்துள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் பணியாற்றி வரும் நாணயவியல் அறிஞர்கள் மற்றும் கல்வெட்டியல் அறிஞர்களைக் கௌரவிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அரசு இரண்டு விருதுகளை வழங்க உள்ளது.
  • தமிழ்நாட்டில் காணப்படும் 60% சுவரோவிய அடையாளங்கள், சிந்து முத்திரைகளில் காணப்படும் எழுத்துக்களுக்கு இணையாக/ஒன்றி இருந்தன.
  • 90 சதவீதத்திற்கும் அதிகமான தென்னிந்தியாவின் சுவரோவியக் குறியீடுகளும் சிந்து சமவெளி நாகரிகத்தின் சுவரோவிய அடையாளங்களும் இணையாக இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்