TNPSC Thervupettagam

சிந்து நதி நீர் ஒப்பந்த மறுபரிசீலனை

September 25 , 2024 3 days 71 0
  • இந்த ஒப்பந்தத்தினை மறுபரிசீலனை செய்வதற்கும் அதனை மாற்றியமைப்பதற்கும் இந்தியா மீண்டும் பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையினை அனுப்பியுள்ளது.
  • சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக வேண்டி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • அப்போதையப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், அப்போதையப் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் ஒப்பந்தத்தில் கராச்சியில் கையெழுத்திட்டனர்.
  • உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பது ஆண்டு காலப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தியா மூன்று "கிழக்கு நதிகளின் (பியஸ், ராவி, சட்லஜ்) "கட்டுப்பாடற்ற பயன்பாடு" மீதான ஒரு கட்டுப்பாட்டையும், பாகிஸ்தான் மூன்று "மேற்கு நதிகள்" [சிந்து, செனாப், ஜீலம்] மீதான கட்டுப்பாட்டையும் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்