பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையேயான நிரந்தர சிந்துநதி ஆணையத்தின் 115வது சந்திப்பு நடந்தது.
இச்சந்திப்பில் சிந்துநதி ஒப்பந்த விதிகளின்படி, ஜம்மு-காஷ்மீரில் நிறைவேற்றப்படும் நீர்மின் திட்டங்களான பகல்துல் (1000 மெகாவாட்) மற்றும் கீழ் கல்னாய் (48 மெகாவாட்) ஆகிய திட்டங்களின் மீதான தொழில்நுட்ப விவாதங்கள் நிகழ்த்தப்பட்டன.
இருநாடுகளின் ஒப்பந்தத்தின்படி இருதரப்பு சிந்துநதி ஆணையர்களும் இரு நாடுகளிலும் உள்ள சிந்து நதிப்படுகையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்டன.