சினார் மரத்திற்குப் புவிசார் குறியிடல்
January 26 , 2025
11 hrs 0 min
39
- ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் ஆனது, காஷ்மீரில் உள்ள பாரம்பரிய சினார் மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் புவிசார் குறியிடல் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
- சினார் மரங்கள் ஆனது அதிக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மரங்களாகும்.
- அந்த மாநில அரசானது இந்த மரங்களுக்கு ‘எண்ணிம ஆதார்களை' வழங்கி ஊடறி செய்யக் கூடிய விரைவுக் குறியீடுகளை (QR) நிறுவியுள்ளது.
- தற்போது, ஒவ்வொரு சினார் மரத்திற்கும் அதன் சொந்த 'ஆதார்' எண் உள்ளதுடன் அது டிஜிட்டல் இந்தியா கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சினார் மரங்களின் எண்ணிக்கையுடன் கூடிய அதன் சொந்த மாவட்டக் குறியீடு உள்ளது.
- இதுவரையில், அந்த மாநில அரசானது 28,560 சினார் மரங்களை அடையாளம் கண்டு புவிசார் குறியீடுகளை வழங்கியுள்ளன.
Post Views:
39