TNPSC Thervupettagam

சிப்கோ இயக்கத்தின் 45வது ஆண்டு தினம்

March 28 , 2018 2432 days 3076 0
  • கூகுள், வனப் பாதுகாப்பு தொடக்கமான (initiative) சிப்கோ இயக்கத்தின் 45வது ஆண்டு தினத்தின் நினைவாக டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • காடுகளை பாதுகாப்பது மற்றும் காடுகளை  அழிக்கப்படுவதிலிருந்து தடுப்பது ஆகியவை சிப்கோ இயக்கத்தின் நோக்கங்களாகும். அணைகள் / தொழிற்சாலைகள் / சாலைகள் ஆகியவற்றிற்காக காடுகள் அதிகளவில் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக  இவ்வியக்கம் தொடங்கப்பட்டது.

  • சிப்கோ என்பதன் பொருள் கட்டியணைத்தல் என்பதாகும். இதுவே இவ்வியக்கத்திற்கான பெயராய் அமைந்தது.
  • நவீன இந்தியாவில், உத்திரப் பிரதேச மாநிலத்தின் மண்டல் கிராமத்திலுள்ள மேல் அலக்கநந்தா பள்ளத்தாக்கில் (Upper Alakananda Valley) ஏப்ரல் 1973ல் சிப்கோ இயக்கம் தொடங்கியது. விரைவிலேயே, இவ்வியக்கம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மற்ற பிற இமாலய மாவட்டங்களுக்கும் (Himalayan District) பரவியது.
  • காந்தியவாதியும், தத்துவவியலாளருமான சுந்தர்லால் பகுகுணா அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம், மரங்கள் வெட்டப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டுமென முறையிட்டார்.
  • இருப்பினும், இந்தியாவில் முதன்முறையாக சிப்கோ இயக்கம், 18 ஆம் நூற்றாண்டிலேயே இராஜஸ்தான் மாநிலத்தில்  தொடங்கியது. அம்மாநிலத்தில் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மரங்களை கட்டியணைத்து அவைகள் வெட்டப்படுவதைத்  தடுத்தனர். இவற்றை  ஜோத்பூர் மகாராஜா வெட்ட ஆணையிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்