1973 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தில் (சாமோலி கோபெஸ்வர்) தொடங்கிய சிப்கோ என்ற இயக்கமானது அதன் 50வது ஆண்டினை நிறைவு செய்துள்ளது.
இதில் கிராம மக்கள், குறிப்பாக கிராமப் புறப் பெண்கள், காடழிப்பு மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்காக மரங்களைக் கட்டிப்பிடித்து அதற்கான எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இந்த இயக்கத்திற்கு இந்தி மொழியில் "அணைத்துக் கொள்ளுதல்" என்று பொருள்படும்சிப்கோ என்ற சொல் கொண்டு பெயரிடப்பட்டது.
சுந்தர்லால் பகுகுணா மற்றும் சாந்தி பிரசாத் பட் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளூர்ச்சமூகங்களை அணிதிரட்டுவதிலும், இந்த இயக்கத்திற்கான தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆதரவினைத் திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகித்தனர்.
இதன் 50வது ஆண்டு நிறைவானது, மாறுதலைக் கொண்டு வருவதில் பொது மக்களின் பங்களிப்பு கொண்டுள்ள ஆற்றல் குறித்த நினைவூட்டலாகவும், உலகம் முழுவதும் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.