சிப்பி ஹீமோலிம்பில் (இரத்தத்திற்கு சமமான) இருந்து பிரிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்புப் புரதங்கள் ஆனது பல்வேறு நோய்த் தொற்றுகளுக்குக் காரணமான சில பாக்டீரியாக்களைக் கொல்லும் திறன் கொண்டுள்ளன.
இந்தப் புரதங்கள், பாதிப்பு மிக்க பாக்டீரியா இனங்களுக்கு எதிரான வழக்கமான சில நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் செயல்திறனையும் மேம்படுத்தும் ஒரு திறனைக் கொண்டிருக்கின்றன.
சிப்பிகள் அவற்றின் மிகவும் இயற்கையான கடல் சார் சூழலில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகளின் பாதிப்பிற்கு அதிக எண்ணிக்கையில் உட்படுகின்றன.
இதன் காரணமாக அவை வலுவான நோயெதிர்ப்புப் பாதுகாப்பை உருவாக்கியுள்ளன.
சிட்னி பாறை சிப்பிகளின் (சாக்கோஸ்ட்ரியா குளோமெராட்டா) ஹீமோலிம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புப் புரதங்கள் ஸ்ட்ரெப்டோகாக்கஸ்.spp என்ற வகையான இனப் பாக்டீரியாவைக் கொல்வதில் பயனுள்ளதாக இருக்கும்.