நெகிழிப் பொருட்கள் மற்றும் அது தொடர்பான தொழிற்துறைகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட நிறுவனமான மத்திய நெகிழிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Central Institute of Plastics Engineering & Technology - CIPET) தனது பொன்விழாக் கொண்டாட்டங்களைக் கொண்டாடியிருக்கின்றது.
இந்நிறுவனம் 1968 ஆம் ஆண்டு சென்னையில் ஐக்கிய நாடு வளர்ச்சித் திட்டத்தின் (United Nations Development Programme - UNDP) உதவியுடன் நிறுவப்பட்டதாகும்.
இதன் இயக்குநரக நிறுவனமாக சர்வதேச தொழிலாளர் நிறுவனம் செயல்பட்டது.
இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றம் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனங்கள் துறையின் கீழ் நெகிழிப் பொருட்கள் துறையில் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் இதுவாகும்.
இது திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஆதரவு சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.
சென்னையில் தலைமையகம் அமையப் பெற்ற இந்நிறுவனம் பாலிமர் மற்றும் அது தொடர்பான தொழிற்துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டின் பல்வேறு மையங்களில் செயல்பட்டு வருகின்றது.