TNPSC Thervupettagam

சிப்ரி (ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்) ஆண்டுப் புத்தகம் 2020

June 21 , 2020 1527 days 482 0
  • ஸ்வீடனின் சிந்தனைக் குழுவான சிப்ரி ஆனது சமீபத்தில் இதை வெளியிட்டு உள்ளது.
  • இந்த ஆண்டின் புத்தகத்தின் படி, (2019 உடன் ஒப்பிடும்போது) இந்தியாவும் சீனாவும் தங்கள் அணு ஆயுதக் கிடங்குகளை விரிவுபடுத்தியுள்ளன. 
  • சீனா முதன்முறையாக அணு ஆயுதங்களை தனது முப்படைக்கும் ஏற்றவாறு உருவாக்கி வருவதாக அந்த சிந்தனைக் குழு கூறுகிறது.
  • இந்தியாவும் தனது கடற்படைக் கூறுகளுக்கும் ஏற்ற வகையில் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது.
  • சிப்ரியின் படி, உலகின் ஒன்பது பெரிய அணு ஆயுத நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை அடங்கும்.
  • அமெரிக்கா மற்றும் ரஷ்யா மட்டுமே உலக அணு ஆயுதங்களில் 90 சதவீதத்தை வைத்திருக்கின்றன.

  • 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 13,400 அணு ஆயுதங்கள் இருந்தன.
  • 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 13,865 அணு ஆயுதங்கள் இருந்தன.
  • அமெரிக்கா மற்றும் ரஷ்யா 2010 ஆம் ஆண்டின் புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தின் (New START - New Strategic Arms Reduction Treaty) கீழ் தங்கள் அணு ஆயுதங்களை குறைத்துள்ளன.
  • இந்தியாவின் அணு ஆயுதங்கள் 2019 ஆம் ஆண்டில் 130 -140 என்ற அளவிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 150 ஆக உயர்ந்துள்ளன.
  • சீனாவின் அணு ஆயுதங்கள் 2019 ல் ஆம் ஆண்டில் 290 போராயுதங்களிலிருந்து 2020 ஆம் ஆண்டில்  320 ஆக உயர்ந்துள்ளன.
  • பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் 2020 ஆம் ஆண்டில் 160 என்ற அளவை  எட்டி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்