இந்தியத் தொல்லியல் துறை (ASI), 13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த சிம்மாச்சலம் கோவிலில் உள்ள ஹனுமான் சிலைக்கு மேலே உள்ள சுவரில் ஒரு தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டைக் கண்டறிந்துள்ளது.
இந்தக் கல்வெட்டு ஆனது, கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
பூரி ஜெகநாதர் தெய்வத்தின் வழிகாட்டுதலின் கீழ் தம்மு முதலியின் மகனான கூர்ம முதலி, ஹனுமான் கோயிலைக் கட்டிய விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
சிம்மாச்சலத்தில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் ஒடியா மொழியில் உள்ளன என்ற நிலையில் இது கிழக்கத்திய கங்கர்கள் வம்சத்துடனான கோயிலின் வரலாற்றுத் தொடர்புகளைப் பிரதிபலிக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 32 நரசிம்மர் கோயில்களில் சிம்மாச்சலமும் ஒன்றாகும்.