TNPSC Thervupettagam

சியோல் வனப் பிரகடனம்

May 21 , 2022 793 days 399 0
  • 15வது உலக வனவியல் மாநாடானது, தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது.
  • அதில் சியோல் வனப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இந்நிகழ்ச்சியை தென் கொரிய அரசாங்கம் சியோல் நகரில் நடத்தியது.
  • உலக வனவியல் மாநாடானது ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்டது.
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இந்த மாநாட்டினை நடத்தியது.
  • பல்லுயிர்த் தன்மை இழப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் பாலைவனமாக்கல் போன்ற உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் வனம் தொடர்பான பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.
  • மேலும், இந்த நிகழ்வில் பல்வேறு தீர்வுகள் வகுக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன.
  • சியோல் வனப் பிரகடனமானது, சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்குகளை 2030 ஆம் ஆண்டிற்குள் அடைய, உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்பு மற்றும் வனங்களின் மறுசீரமைப்புக்கான முதலீட்டினை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.
  • முதல் உலக வனவியல் மாநாடானது 1926 ஆம் ஆண்டில் இத்தாலி நகரில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்