சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அதிபர் பஷர் அல்-அசாத்தின் பல்லாண்டு பல தசாப்த கால ஆட்சி முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர்.
அவரது ஆட்சியின் கீழ், சிரியா ஈரானின் ஒரு முக்கியக் கூட்டாளியாக மாறியதால் அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் விரோதமான நாடாகவே திகழ்ந்தது.
அசாத்தின் பதவி நீக்கம் அவரது 24 ஆண்டுகாலத் திடமான ஆட்சியையும் 54 ஆண்டு கால அசாத் குடும்ப ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.
சிரியப் போரில் சுமார் அரை மில்லியன் மக்கள் உயிரிழந்த நிலையில், போருக்கு முன்னதாக சுமார் 23 மில்லியனாக இருந்த அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.