வங்கியாளர்களின் “2020 ஆம் ஆண்டின் சிறந்த 500 வங்கி நிறுவனங்கள்” என்ற அறிக்கையின்படி, உலகளாவிய வங்கிகளிடையே ‘நிறுவன மதிப்பில் உயர் அதிகரிப்பு’ கொண்ட வங்கிகளின் பட்டியலில் இந்தியாவின் இண்டஸ்இண்ட் வங்கியானது முதலிடத்தில் உள்ளது.
இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, "நாட்டின் மொத்த நிறுவன மதிப்பில் சிறந்த 50 நாடுகள்" என்ற பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தப் பட்டியலில் 2019 ஆம் ஆண்டில் 10வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 8வது இடத்தில் உள்ளது.