TNPSC Thervupettagam

சிறந்த ஏற்றுமதி குறியீடு

December 2 , 2018 2057 days 574 0
  • உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்பான் பொருட்கள் பிரிவில் ‘சிறந்த ஏற்றுமதி’ குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த தகுதி நிலையானது வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த “சிறந்த ஏற்றுமதி நகரங்கள்” குறியீட்டின் கீழ் இந்நகரத்தின் கம்பள தயாரிப்பாளர்கள் மத்திய அரசிடமிருந்து நிதியுதவியினைப் பெறுவர்.
  • இந்த உதவியானது நவீன இயந்திரங்களை வாங்கவும், ஏற்றுமதி கட்டமைப்பை மேம்படுத்தவும், கண்காட்சிகளை ஏற்பாடு செய்யவும் உலகின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தவும் பயன்படும்.
  • உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டமானது கையால் நெய்யப்பட்ட கம்பளங்களுக்கு உலகமெங்கிலும் பிரபலமானதாகும்.
  • கங்கை ஆற்றின் அருகில் அமைந்துள்ள இந்த பாதோஹி நகரமானது இந்த குறியீட்டைப் பெற்ற 37-வது நகரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்