மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் (Ministry of Panchayati Raj) நாட்டின் சிறந்த கிராமப் பஞ்சாயத்தாக (best Gram Panchayat) கொல்கத்தாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திகம்பர்பூர் (Digambarpur) கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் (South 24 Parganas district) இந்த திகம்பர்பூர் கிராமப் பஞ்சாயத்து அமைந்துள்ளது.
இந்த திகம்பர்பூர் கிராமப் பஞ்சாயத்தானது திகம்பர்பூர் சாரதா சங் பிரதமிக் பஹீமுகி சமாபே சமிதி நிறுவனம் (Digambarpur Sarada Sangh Prathamik Bahumukhi Samabay Samity Ltd) எனும் கூட்டுறவுச் சங்கத்தினைக் கொண்டுள்ளது.
இந்த கூட்டுறவுச் சங்கமானது காளான் சாகுபடி (mushroom cultivation) முதல் இயற்கை உரங்களின் உற்பத்தி (production of organic fertilisers) வரையென சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகின்றது. மேலும் அவற்றிற்குச் சந்தை வாய்ப்பினையும் வழங்குகின்றது.