தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைச்சகங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட தூய்மைத் திட்டமான “சுவச்சதா பாக்வதா” (Swachchata Pakhwada) தொடக்கத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு "சிறந்த துறைக்கான விருது" வழங்கப்பட்டுள்ளது.
சுவச்சதா பாக்வதா திட்டமானது அனைத்து அமைச்சரக வளாகங்கள், மத்திய மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள மத்திய அரசு மருத்துவமனைகள், பொது ஆரோக்கிய மையங்கள் அனைத்திலும் கடைபிடிக்கப்படுகிறது.
சுவச்சதாபாக்வதா
அரசு அலுவலக வளாகங்களில் தூய்மையைப் பேணி பராமரிப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.