TNPSC Thervupettagam

சிறந்த நாடுகளின் தரவரிசை அறிக்கை

November 11 , 2022 745 days 376 0
  • சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை விட மலிவான உற்பத்திச் செலவைக் கொண்ட நாடாக இந்தியா தரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கச் செய்திகள் மற்றும் உலக அறிக்கை கூறுகிறது.
  • இந்த அறிக்கையில், ஒட்டு மொத்த சிறந்த நாடுகளின் தரவரிசையில் இடம்பெற்ற 85 நாடுகளில் இந்தியா 31வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, தடையற்ற வணிகம் என்ற துணைப் பிரிவின் கீழ், மலிவான உற்பத்திச் செலவுகள் கொண்ட நாடு என்ற அளவில் இந்தியா 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
  • ஆனால் 'சாதகமான வரிச் சூழல்' என்ற பிரிவில் 100 மதிப்பெண்களுக்கு 16.2 மதிப்பெண்களையும், 'ஊழல் அற்ற நாடு' பிரிவில் 18.1 மதிப்பெண்களையும் மற்றும் 'வெளிப்படையான அரசாங்கக் கொள்கைகள்' பிரிவில் 3.5 என்ற மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
  • மேலும், 'பொருளாதார ரீதியாக நிலையான நாடுகள்' என்ற துணைப் பிரிவில் இந்தியா 9.9 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
  • ஒட்டு மொத்த சிறந்த நாடுகளின் தரவரிசையில், சுவிட்சர்லாந்து முதலிடத்திலும், ஜெர்மனி, கனடா, அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்