TNPSC Thervupettagam

சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது

January 31 , 2018 2491 days 1125 0
  • இந்திய நாடாளுமன்றக் குழு (Indian Parliamentary Group) சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருதினை அறிவித்துள்ளது.
வருடம் விருதைப் பெறும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினரின் அவை
2017 பத்ருஹரி மஹ்தாப் (பிஜு ஜனதாதள தலைவர்) மக்களவை
2016 தினேஷ் திரிவேதி (திரினாமுல் காங்கிரஸ் உறுப்பினர்) மக்களவை
2015 குலாம் நபி ஆசாத் (எதிர்க்கட்சி தலைவர்-காங்கிரஸ்) மாநிலங்களவை
2014 ஹுகும்தேவ் நாராயண் யாதவ் மக்களவை
2013 நஜ்மா ஹெப்துல்லா மாநிலங்களவை

  • அனுபவம், விவாத திறன், சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆழ்ந்த விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

விருதைப் பற்றி

  • சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதானது இந்திய நாடாளுமன்றக் குழுவால் வழங்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பான செயல்பாட்டுக்குப் பங்களிக்கும் தற்கால உறுப்பினர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.
  • 1992ஆம் ஆண்டு சிவராஜ் பாட்டில் மக்களவையின் சபாநாயகராக இருந்தபொழுது இந்த விருது நிறுவப்பட்டது. சிவராஜ் பாட்டில் 1991 முதல் 1996 வரை நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகராக பதவி வகித்தார்.
  • இந்திய பாராளுமன்றக் குழு (Indian Parliamentary Group) என்பது நாடாளுமன்றத்தின் 24 நடப்பு மற்றும் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட தன்னார்வ அமைப்பு ஆகும்.
  • இந்தக் குழுவிற்கு மக்களவையின் சபாநாயகர் தலைமை வகிக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்