மருத்துவக் கல்வி இயக்குநரகமானது, மருத்துவக் கல்லூரி சார்ந்த மருத்துவ மனைகளின் செயல்திறன் அடிப்படையிலான ஒரு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள சென்னை இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை (RGGGH) ஆனது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்ட இத்தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
சேலம் மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவை இதில் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.