2021 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப் பட்டுள்ளது.
சிறந்த நகராட்சியாக முதல் பரிசுக்கு உதகை நகரமும், இரண்டாம் பரிசுக்கு திருச்செங்கோடு நகரமும் மற்றும் மூன்றாம் பரிசுக்கு சின்னமனூர் நகரமும் தேர்வாகியுள்ளன.
சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசுக்கு திருச்சியின் கல்லகுடி, இரண்டாம் பரிசுக்கு கடலூரின் மேல்பாட்டம்பாக்கம், மூன்றாம் பரிசுக்கு சிவகங்கையின் கோட்டையூர் ஆகியவை தேர்வாகியுள்ளன.