TNPSC Thervupettagam

சிறந்த மினி ரத்னா பொதுத் துறை நிறுவனம்

January 28 , 2019 2011 days 798 0
  • புதுதில்லியில் நடைபெற்ற 6-வது பொதுத் துறை விருதுகள் வழங்கும் விழாவில் யுத்திசார் செயல்பாடுகள் நிதியியல் பிரிவில் சிறந்த மினிரத்னா பொதுத்துறை நிறுவனத்துக்கான விருதை நுமாலிகார்க் சுத்திகரிப்பு நிறுவனம் (Numaligarh Refinery Limited - NRL) பெற்றுள்ளது.
  • NRL என்பது பாரத் பெட்ரோலியத்திற்குச் சொந்தமான அஸ்ஸாமில் உள்ள மினிரத்னா நிறுவனமாகும்.
  • இது பாரத் பெட்ரோலியம், ஆயில் இந்தியா மற்றும் அஸ்ஸாம் அரசு ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும்.
  • நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் பொதுத் துறை நிறுவனங்களை (PSU - Public Sector Undertakings) அங்கீகரிக்கும் விதமாக இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்