30 வயதான சமூக ஆர்வலர் திருநங்கை கிரேஸ் பானுவிற்கு தமிழக அரசின் முதலாவது “சிறந்த மூன்றாம் பாலினத்தவர்” என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் நன்மைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்காக வேண்டி அவருக்கு இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
இந்த விருதானது தமிழக சமூக நலம் மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறையினால் வழங்கப் படுகிறது.
திருநங்கைச் சமுதாயத்தினரையும் சமுக நலனுக்காக அவர்கள் ஆற்றும் பங்களிப்பினையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசினால் முதன்முறையாக இந்த விருதானது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.