பெரிய அணைகளின் நன்நிலை மற்றும் பாதுகாப்புடைமையின் சிறப்புத் தன்மைக்கான (Excellence in Health and Safety of large Dams) 2018-ஆம் ஆண்டின் நீர்ப்பாசன மற்றும் ஆற்றல் உற்பத்திக்கான மத்திய வாரியத்தின் சிறப்பு அங்கீகார விருது (CBIP – Central Board of Irrigation and power - special Recognition Award) மத்திய நீர் ஆணையத்திற்கு (Central water Commission) வழங்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (Dam Rehabilitation and Improvement Project – DRIP) ஆதரவோடு நாட்டிலுள்ள பெரிய அணைகளின் பாதுகாப்பு மற்றும் நன்நிலையை மேம்படுத்துவதற்காக தேசிய நீர் ஆணையம் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது தேசிய நீர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் துணையுடன் மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகமானது, ஆறாண்டு காலத்திட்டமான அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
இந்நோக்கத்திற்கென மத்திய நீர் ஆணையத்தில் மத்திய அணை பாதுகாப்பு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இத்திட்டத்தின் அமலாக்கத்தை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும்.