TNPSC Thervupettagam
January 7 , 2018 2515 days 783 0
  • பெரிய அணைகளின் நன்நிலை மற்றும் பாதுகாப்புடைமையின் சிறப்புத் தன்மைக்கான (Excellence in Health and Safety of large Dams) 2018-ஆம் ஆண்டின் நீர்ப்பாசன மற்றும் ஆற்றல் உற்பத்திக்கான மத்திய வாரியத்தின் சிறப்பு அங்கீகார விருது (CBIP – Central Board of Irrigation and power - special Recognition Award) மத்திய நீர் ஆணையத்திற்கு (Central water Commission) வழங்கப்பட்டுள்ளது.
  • உலக வங்கியின் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (Dam Rehabilitation and Improvement Project – DRIP) ஆதரவோடு நாட்டிலுள்ள பெரிய அணைகளின் பாதுகாப்பு மற்றும் நன்நிலையை மேம்படுத்துவதற்காக தேசிய நீர் ஆணையம் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது தேசிய நீர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • உலக வங்கியின் துணையுடன் மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகமானது, ஆறாண்டு காலத்திட்டமான அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
  • இந்நோக்கத்திற்கென மத்திய நீர் ஆணையத்தில் மத்திய அணை பாதுகாப்பு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இத்திட்டத்தின் அமலாக்கத்தை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்