ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக கோடைக் கால விளையாட்டுப் போட்டிகளில் 85 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 368 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் 170 நாடுகளைச் சேர்ந்த 7000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 284 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு ஒலிம்பிக்ஸின் 500 மீட்டர் பிரிவில் பெண் மிதிவண்டி வீர்ர்களான மணிமேகலை மற்றும் சுருதி ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
சிறப்பு ஒலிம்பிக்ஸ் என்பது விளையாட்டு வலிமையின் மூலம் அறிவுசார் குறைபாடுகளுடன் “உறுதிப்பாட்டு மக்களின்” மேம்பாடு மீது கவனத்தைச் செலுத்தும் உலகின் மிகப் பெரிய மனிதாபிமான விளையாட்டு நிகழ்ச்சியாகும்.