மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குளிர்காலங்களில் பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையை (மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை) எதிர்கொள்ளும் அதிக உயரமுள்ள லடாக் பகுதி மக்களுக்குப் பயன்படும் வகையில் சிறப்பு குளிர்கால தர டீசல் விநியோகத்தை அறிமுகப் படுத்தினார்.
கடுமையான குளிர்கால சூழ்நிலையில் ஏற்படும் எரிபொருள் இழப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) நிறுவனமானது இதை உருவாக்கியது.
இது BS-VI தரத்திற்கான BIS விதிகளையும் பூர்த்தி செய்கின்றது.