சிறு நிதியியல் வங்கிகளுக்கான 10000 கோடி ரூபாய் மதிப்பிலான தனது முதல் சிறப்பு (Special Long Term Repo Operation – SLTRO) நீண்டகால ரெப்போ நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இந்திய ரிசர்வ் (RBI) வங்கி சமீபத்தில் அறிவித்தது.
2021 ஆம் ஆண்டு மே முதல் ஒவ்வொரு மாதமும் SLTRO (Special Long Term Repo Operation) நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என RBI அறிவித்துள்ளது.
அனைத்து சிறு நிதியியல் வங்கிகளும் SLTRO நடவடிக்கையில் பங்கேற்கலாம்.
இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்துப் பெறப்படும் தொகையானது முறை சாரா துறைகள் மற்றும் சிறு வணிக அலகுகள் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டுமே கடனாக வழங்கப்படும் என்பதை அந்த வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுள் ஒன்றாக இதனைத் தொடங்கியுள்ளது.