TNPSC Thervupettagam

சிறப்பு நீதி மன்றங்கள்

November 2 , 2017 2451 days 782 0
  • தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்லும் விதமாக, குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க திட்ட அறிக்கை ஒன்றை வகுத்து சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துரித தகவல்கள்
  • கடந்த 2014 பொதுத் தேர்தலின் வேட்பு மனு தாக்கலின் படி நாட்டில் 1581 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் காணப்படுகின்றது.
  • தற்போதைய 16-வது மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மேல் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
  • மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் படி, கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் அதாவது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஒருவர் அவரது தண்டனை நாட்களிலும், விடுதலை ஆன  பிறகு  6 ஆண்டுகளுக்கும்  தேர்தலில் போட்டியிடத் தடை உள்ளது.
  • 2013 ஆம் ஆண்டின் லில்லி தாமஸ் வழக்கில் (Lilly Thomas Case) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால் உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னால் தண்டிக்கப்பட்ட உறுப்பினருக்கு மேல்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த 90 நாள் அவகாசத்தையும் அந்த வழக்கில் உச்சநீதி மன்றம் ரத்து செய்தது.
  • 2014ஆம் ஆண்டின் பப்ளிக் இந்தியா பவுண்டேசன் வழக்கில் (Public India Foundation Case) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கிரிமினல் வழக்குகளை குறிப்பாக ஊழல் மற்றும் கொடூரமான கிரிமினல் குற்றங்கள் தொடர்புடைய வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றம் கால வரம்பு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்