மத்திய அமைச்சரவையானது, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் (FTSCs) திட்டத்தினை 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவி பெறும் இத்திட்டம் (CSS) ஆனது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் குறிப்பாக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவான நீதி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது 96.28% என்ற சிறப்பான தீர்வு காணல் விகிதத்தைக் கொண்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும், இந்தத் திட்டத்தின் கீழ் 88,902 புதிய வழக்குகள் தொடரப் பட்டன என்பதோடு மேலும் 85,595 வழக்குகள் இதன் மூலம் தீர்க்கப்பட்டன.