TNPSC Thervupettagam

சிறப்புக் காஷ்மீர் தூதர்

June 5 , 2019 1906 days 566 0
  • இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது (OIC - Organisation of Islamic Cooperation) சவுதி அரேபியாவைச் சேர்ந்த யூசெப் அல்டோபெக் என்பவரை ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புத் தூதராக அறிவித்துள்ளது.
  • இதன் மூலம் இந்த அமைப்பானது காஷ்மீர் மீதான இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையில் தலையிட்டு, தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சவுதி அரேபியாவின் மெக்காவில் நடைபெற்ற OIC உறுப்பு நாடுகளின் 14-வது இஸ்லாமிய சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
  • இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
OIC
  • OIC என்பது 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இது 57 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இது சவுதி அரேபியாவின் ஜெட்டாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
  • இதன் நோக்கம் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களின் நல்வாழ்வு மற்றும் செயல்பாடுகளை உறுதி செய்வது மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்